Home One Line P1 ஜோகூரில் மீண்டும் ஆட்சி மாற்றமா?

ஜோகூரில் மீண்டும் ஆட்சி மாற்றமா?

905
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: ஜோகூர் தேசிய கூட்டணி தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்களின் கூற்றுபடி, மாநிலத்தின் தேசிய கூட்டணி அரசாங்கம் இப்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளன.

இப்புதிய கூட்டணியிலிருந்து பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றால் தேசிய கூட்டணி ஜோகூரை இழக்க நேரிடும் என்று ஒரு வட்டாரம் தெரிவித்ததாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.

ஜூலை நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக மத்தியில் அரசாங்க மாற்றம் குறித்த அமானா துணைத் தலைவர் சலாவுடின் அயூப்பின் எதிர்பார்ப்புகள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஜோகூரில் தேசிய கூட்டணிக்கு ஆதரவாக சிறிதளவு பெரும்பான்மை இருப்பதால், அவர் சலாவுடினுடன் உடன்பட்டார். இது நம்பிக்கைக் கூட்டணியுடன் ஒப்பிடும்போது இரண்டு இடங்களால் மட்டுமே வேறுபடுகிறது என்று அவர் கூறினார்.

பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் இதற்கு ஆதரிப்பார்களா குறித்து கேட்டதற்கு, “அவர்கள் இல்லையென்றால், இந்த கட்சியைச் சேர்ந்தவர் (தேசிய கூட்டணி) வேறு யார்?” என்று அவர்பதிலளித்தார்.

இருப்பினும், அந்த சட்டமன்ற உறுப்பினர்கலின் பெயரை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.