கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மூன்று பினாங்கு மாநில சட்ட அமலாக்க அதிகாரிகளை நேற்று பொதுமக்களிடமிருந்து 500,000 ரிங்கிட் இலஞ்சம் கோரிய சந்தேகத்தின் பேரில் கைது செய்தது.
கெடா எம்ஏசிசி இயக்குனர் டத்தோ ஷாஹாரோம் நிசாம் அப்துல் மானாப் கூறுகையில், 42 வயதான சந்தேக நபர் பினாங்கில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் திங்கட்கிழமை மதியம் 12.15 மணிக்கு தடுத்து வைக்கப்பட்டதாகவும், அதே நேரத்தில் 29 மற்றும் 52 வயதுடைய இருவர் நேற்று இரவு 10.15 மற்றும் 10.38 மணிக்கு கெடா எம்ஏசிசி அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டதக்வும் கூறினார்.
பொதுமக்கள் புகாரளித்த வணிக வழக்குக்கு ஈடாக சந்தேக நபர் 500,000 ரிங்கிட் இலஞ்சம் கோரியதாகவும், ஏற்கனவே 100,000 ரிங்கிட் பெற்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
“சந்தேகநபர்கள் மூவரும் இன்று அலோர் ஸ்டார் கீழ்நிலை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு உதவ தடுத்து வைப்பதற்கான விண்ணப்பத்திற்காக அழைத்து வரப்படுவார்கள்” என்று அவர் இன்று காலை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அனைத்து சந்தேக நபர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளிலும் எம்ஏசிசி ஆய்வுகள் நடத்தியதாகவும், சில பணத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்ததாகவும் ஷாஹாரோம் நிசாம் தெரிவித்தார்.