Home One Line P1 நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 98 பேருக்கு 1,000 ரிங்கிட் அபராதம்

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 98 பேருக்கு 1,000 ரிங்கிட் அபராதம்

542
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மூன்று வெளிநாட்டு பெண்கள் உட்பட ஆறு பேர் இங்குள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் காவல் துறை சோதனையின்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 98 பேருக்கு தலா 1,000 ரிங்கிட் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது சட்டவிரோதமாக செயல்பட்டதற்காக திங்கட்கிழமை அதிகாலை 12.20 மணியளவில் டாமான்சாரா உத்தாமாவில் உள்ள மதுபான விடுதியின் மீது காவல் துறையினர் சோதனை நடத்தினர் என்று பெட்டாலிங் ஜெயா காவல் துறை துணைத் தலைவர் நிக் எசானி முகமட் பைசல் தெரிவித்தார்.

“அந்நேரத்தில் 56 ஆண்கள் மற்றும் 45 பெண்களைக் கொண்ட குழுவை அதிகாரிகள் அடையாளம் கண்டனர். நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறியதற்காக 98 உள்ளூர் மக்களுக்கு 1,000 ரிங்கிட் அபராதம் விதித்தோம்.”

#TamilSchoolmychoice

“21 முதல் 40 வயதுக்குட்பட்ட மூன்று வெளிநாட்டு பெண்கள், விசாவை மீறியதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.” என்று அவர் நேற்று ஒரு நேர்காணலில் கூறினார்.

39 வயதான உள்ளூர் நபர் ஒருவர் அனுமதியின்றி வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதற்காகவும், சரியான உரிமம் இல்லாமல் மதுபானங்களை விற்பனை செய்ததற்காகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

“நான்கு ரசீதுகளுடன் 66 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தோம். இரண்டு உள்ளூர் பெண்கள் போதைப்பொருட்களுக்கு நேர்மறையாக பரிசோதித்தப் பின்னர், அவர்களை தடுத்து வைத்துள்ளோம். ” என்று அவர் கூறினார்.