Home One Line P1 உலகளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 400,000-ஐத் தாண்டியது

உலகளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 400,000-ஐத் தாண்டியது

435
0
SHARE
Ad

மாஸ்கோ: கொரொனா தொற்று நோயினால் உலகளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 400,000- ஐத் தாண்டியுள்ளது.

மேலும் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 6.9 மில்லியனைத் தாண்டியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

உலகளவில் இறப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 3,469 அதிகரித்து 400,857- ஆக அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று மட்டும் இந்த தொற்றினால் பாதிப்புற்றவர்களின் எண்ணிக்கை 131,296 பேராக அதிகரித்து உலகளவில் 6,931,000 பாதிப்புகள் பதிவிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் பெரும்பாலான தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 3,311,387 பேர் இந்த தொற்றுக்கு ஆளாகி இருக்கும் நிலையில், 181,804 பேர் இறந்துள்ளனர்.