கோலாலம்பூர்: சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதமர் துறையின் துணை அமைச்சராக தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாபுடின் யாஹ்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த தகவலை பிரதமர் பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தது.
கடந்த மாதம் ஷாருடின் முகமட் சல்லே பதவி விலகியதைத் தொடர்ந்து, துணை பொதுப் பணி அமைச்சராகப் பொறுப்பேற்கும் எடின் சியாஸ்லி ஷித்துக்கு பதிலாக ஷாபுடின் நியமிக்கப்படுவார் என்று அது தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகுதியில் மாமன்னர் முன்னிலையில் ஷாபுடின் பதவியேற்பார்.
தேசிய கூட்டணி அமைச்சரவையில் இருந்து பதவி விலகிய, ஷாருடின், தேசிய கூட்டணி அரசாங்கத்தில் சேர்ந்ததை தவறான நடவடிக்கை என்று விவரித்திருந்தார்.
“ஸ்ரீ காடிங் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்கள் இடைத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர் என்பதைக் கருத்தில் கொண்டு நான் முன்னுரிமை அளித்திருக்க வேண்டும்.
“இந்த பிழையை சரிசெய்வதற்கான முதல் படியாக, தேசிய கூட்டணியின் பிரதமரால் இந்த பதவிக்கு நான் நியமிக்கப்பட்டதால், நான் பதவி விலகுகிறேன்.” என்று அவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.