Home One Line P1 சபா தேர்தல் பாதுகாப்பானதாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும்

சபா தேர்தல் பாதுகாப்பானதாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும்

563
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சபா மாநிலத் தேர்தலுக்கான தேதிகளைத் தீர்மானிக்க தேர்தல் ஆணையம் கூடுவதற்கு ஐந்து நாட்கள் இருக்கும் நிலையில், சபா அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ புங் மொக்தார் ரடின் தேர்தல்களை நடத்துவதற்கு ஒரு சவாலை முன்வைத்தார்.

தற்போதைய கொவிட்19 தொற்றுநோய் தாக்கத்திலிருக்கும் போது, வெளியே வந்து வாக்களிப்பது பாதுகாப்பானது என்பதை மக்களை நம்ப வைக்கும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

“வெளியே வந்து வாக்களிப்பது பாதுகாப்பானது என்று மக்களை உண்மையிலேயே நம்ப வைக்கும் நடைமுறைகளுடன் தேர்தல் ஆணையம் வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வேட்பாளர்கள் மற்றும் பிரச்சாரத்தின் போது நோயால் பாதிக்கப்படாமல் இருக்க இந்த விஷயத்தில் சுகாதாரத் துறையின் ஒத்துழைப்பை இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

#TamilSchoolmychoice

“கடுமையான நடைமுறைகளின் பற்றாக்குறை சபா மக்களிடையே கவலைக்கு ஒரு காரணம்” என்று அவர் மக்களவையில் இன்று தெரிவித்தார்.

“மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், வேட்பாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், பிரச்சார ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதாவது பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

சபா தேர்தலுக்கான தேதிகளை தீர்மானிக்க ஆகஸ்ட் 17-ஆம் தேதி கோத்தா கினபாலுவில் தேர்தல் ஆணையம் சிறப்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜூலை 30-ஆம் தேதி சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது. சபா மாநில ஆளுநர் துன் ஜுஹர் மஹிருடினின் ஒப்புதல் பெற்ற பின்னர் முதல்வர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் சட்டமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார்.