தஞ்சோங் மாலிம்: (காலை 11.10 மணி நிலவரம்) சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தல், தேசிய கூட்டணி மற்றும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்களுக்கு இடையிலான மூன்று முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தேர்தல் ஆணைய அதிகாரி ஷம்சுல் ரிட்சுவான் இட்ரிஸ் சற்று முன்னர் அறிவித்தார்.
ஆகஸ்ட் 29 தேர்தலில், தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து அம்னோ தஞ்சோங் மாலிம் தொகுதித் தலைவர் முகமட்சைடி அசிஸ், 43, சுயேட்சை வேட்பாளர் வழக்கறிஞர் அமீர் குசைரி முகமட் தனுசி, 38, மற்றும் கல்வியாளர் டாக்டர் எஸ்.சந்தரசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
துன் டாக்டர் மகாதிர் முகமட்டின் புதிய கட்சி இன்னும் பதிவு செய்யப்படாததால், குசைரி சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
நான்கு தவணை பதவியில் இருந்த டத்தோ குசைரி அப்துல் தாலிப் (59) ஜூலை 15-ஆம் தேதி மாரடைப்பால் காலமானதை அடுத்து சிலிம் சட்டமன்றம் காலியானது.