Home One Line P1 கொவிட்19: புதிய சம்பவங்கள் 6 மட்டுமே! – மரணம் ஏதுமில்லை

கொவிட்19: புதிய சம்பவங்கள் 6 மட்டுமே! – மரணம் ஏதுமில்லை

960
0
SHARE
Ad

noor-hisham-health-min-07072020கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. மலேசிய சுகாதார அமைச்சு இன்று புதன்கிழமை (செப்டம்பர் 2) இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

நேற்று 14 சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில் இன்று புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை  மீண்டும் கணிசமாகக் குறைந்திருக்கிறது.

அதே வேளையில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொடர்பான மரணம் ஏதும் நிகழவில்லை.

#TamilSchoolmychoice

இதுவரையில் கொவிட்-19 தொடர்பான மரண எண்ணிக்கை 128 ஆக இருந்து வருகிறது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 6 சம்பவங்களில் 2 பேர் உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டுள்ளனர். எஞ்சிய 4 பேர் வெளிநாட்டிலிருந்து தொற்று கண்டவர்களாவர்.

இன்றைய அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,360 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் முற்றிலும் குணமடைந்து இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,079 ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நாட்டில் மொத்தம் 153 பேர் இன்னும் மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புகளுக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 3 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

வெளிநாட்டிலிருந்து தொற்று கண்ட நால்வரில் அனைவருமே மலேசியர் அல்லாதவர் ஆவர். இவர்களில் மூவர் இந்தோனிசியாவைச் சேர்ந்தவர். ஒருவர் சிரியாவைச் சேர்ந்தவர்.

உள்நாட்டில் தொற்று கண்ட இருவரில் ஒருவர் சிலாங்கூரையும் இன்னொருவர் பகாங்கையும் சேர்ந்தவர்.