Home One Line P1 சபா தேர்தல்: பிதாஸ் தேமு வேட்பாளருக்கு கொவிட்19 தொற்று

சபா தேர்தல்: பிதாஸ் தேமு வேட்பாளருக்கு கொவிட்19 தொற்று

518
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபா தேர்தலில் போட்டியிடும், தேசிய முன்னணி வேட்பாளர் சுபியான் அப்துல் காரிம், கொவிட்19 தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து முகநூலில் பதிவிட்ட சுபியான், இவ்வேளையில் தமக்கு வாக்காளர்கள், ஊழியர்கள், இயந்திரங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உதவியதாக தெரிவித்தார்.

“நான், சுபியான் அப்துல் காரிம், தேசிய முன்னணியின் பிதாஸ் தொகுதி என்03 வேட்பாளர், கொவிட்19 தொற்றுக்கு ஆளாகி உள்ளேன்”

#TamilSchoolmychoice

“இந்த சோதனையை எதிர்கொள்ள எனக்கு வலிமை இருக்கவும், உடனடியாக குணமடைய வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்யுங்கள். தயவுசெய்து என்னுடன் இருந்த அனைவரும் முன்னெச்சரிக்கையாக பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள், ” என்று அவர் கூறினார்.

முன்னதாக, அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் ரஸ்லான் ராபி மற்றும் அம்னோ தகவல் தலைவர் ஷாரில் சுபியான் ஹம்டான் ஆகியோர் சபாவிலிருந்து திரும்பியபோது கொவிட்19- க்கு சாதகமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டனர்.

அதே நேரத்தில் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா, ரஸ்லானின் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டார்.

கோத்தா கினபாலு சுகாதார அலுவலகத்தில் இருந்து வியாழக்கிழமை கண்காணிப்பு உத்தரவைப் பெற்றுள்ளதாக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெரிவித்தார்.

“இந்த உத்தரவின் மூலம், நான் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கோத்தா கினபாலுவில் உள்ள ஒரு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் தமது முகநூலில் தெரிவித்திருந்தார்.

மூன்று நாட்களுக்கு முன்பு கோலாலம்பூர் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததாகவும், தொற்றுக்கு ஆளாகவில்லை என்றும் அனுவார் கூறினார்.

அவர் கோத்தா கினபாலு சுகாதாரத் துறையில் மற்றொரு பரிசோதனையை மேற்கொண்டதாகவும், அதன் முடிவு விரைவில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

“நான் வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்றுவேன், வழக்கம் போல் தேர்தல் இயந்திரங்களின் அனைத்து மட்டங்களுடனும் தொடர்புகொள்வேன்,” என்று அவர் கூறினார்.