Home One Line P1 சபா தேர்தல்: கூடுதல் மருத்துவ பணியாளர்கள் அணிதிரட்டப்பட்டுள்ளனர்

சபா தேர்தல்: கூடுதல் மருத்துவ பணியாளர்கள் அணிதிரட்டப்பட்டுள்ளனர்

505
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 16- வது சபா மாநிலத் தேர்தல் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சிகளை வலுப்படுத்த அமைச்சகம் மாநிலத்திற்கு கூடுதல் மருத்துவ பணியாளர்களை அணிதிரட்டியுள்ளதாக அறிவித்தார்.

முகநூலில் இது குறித்து அறிவித்த அவர், சிலாங்கூரைச் சேர்ந்த ஐந்து சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் நெகிரி செம்பிலனைச் சேர்ந்த மேலும் ஐந்து சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள் நேற்று சபா லாஹாட் டாத்துக்கு சென்றதாகத் தெரிவித்தார்.

“கொவிட்19 பரவுவதைத் தடுப்பதற்கான நாட்டின் முயற்சியில் முன்னணி பணியாளர்கள் அனைவரும் இந்தத் துறையில் தங்கள் கடமைகளைச் செய்யத் தயாராக உள்ளனர்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நெகிரி செம்பிலானில் இருந்து துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனை, ஜெம்புல் மருத்துவமனை, ஜெலெபு மருத்துவமனை, துவாங்கு ஜாபர் மருத்துவமனை மற்றும் போர்ட் டிக்சன் மருத்துவமனை ஊழியர்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். சிலாங்கூரிலிருந்து செர்டாங் மருத்துவமனை, தெங்கு அம்புவான் ஜெமா மருத்துவமனை, காஜாங் மருத்துவமனை மற்றும் சுங்கை புலோ மருந்துவமனையைச் சேர்ந்தவர்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மலேசியா நேற்று 111 புதிய கொவிட்19 சம்பவங்களைப் பதிவுசெய்தது. சபாவில் – பெரும்பகுதி சப்மவங்கள் பதிவாகின. அங்கு 97 சம்பவங்கள் பதிவாகின.

சமீபத்திய வாரங்களில், பல புதிய கொவிட்19 தொற்றுக் குழுக்கள் சபாவில் பதிவாகி உள்ளன.