Home One Line P1 நஜிப்-சாஹிட் தலைமையிலான அம்னோவை ஜசெக ஏற்காது

நஜிப்-சாஹிட் தலைமையிலான அம்னோவை ஜசெக ஏற்காது

556
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஆட்சி கவிழ்ப்பு திட்டத்தை தேசிய முன்னணி மற்றும் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர் என்ற செய்தியைப் பெற்ற பின்னர், ஜசெக அது அம்னோவுடன் ஒத்துழைக்காது என்று வலியுறுத்தியது.

நேற்று பிற்பகலில் கோத்தா கினபாலுவில் பிரச்சாரம் செய்த ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங், கட்சியின் இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.

“நாங்கள் அம்னோ மற்றும் பெர்சாத்து தலைவர் மொகிதின் யாசினுக்கு எதிரானவர்கள், ஏனென்றால் மக்களைப் பிரிக்கும் கொள்கையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது

#TamilSchoolmychoice

“சாஹிட் (ஹமிடி) தலைமையிலும், நஜிப் (ரசாக்) தலைமையிலும் அம்னோவுடன் ஜசெக ஒத்துழைக்காது என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். நிச்சயமாக இல்லை.

“நிச்சயமாக இது கேட்கப்படுகிறது, நாங்கள் சபாவில் அம்னோ அல்லது தேசிய கூட்டணிக்கு எதிராக இருந்தால், சாஹிட் அல்லது நஜிப்பின் கீழ் அம்னோவுடன் நாங்கள் எவ்வாறு ஒத்துழைக்க முடியும்? ,” என்று அவர் கூறினார்.

அண்மையில், புதிய அரசாங்கத்தை உருவாக்க அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிக்க முடிவு செய்வதிலிருந்து, அம்னோ மற்றும் தேசிய முன்னணி அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் தடுக்க முடியாது என்று சாஹிட் ஹமிடி கூறியிருந்தார்.

“நன்கு அறியப்பட்டபடி, அம்னோ மற்றும் தேசிய முன்னணி ஆகியவை தேசிய கூட்டணியின் அங்கக் கட்சிகள் அல்ல. தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே.

“அம்னோ மற்றும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வார் இப்ராகிமை ஆதரிக்க முடிவு செய்ததாகவும், மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுவதை, அம்னோ, தேசிய முன்னணிக்குத் தடுக்க உரிமையில்லை”

“பல அம்னோ, தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை நான் மதிக்கிறேன், ”என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.