Home One Line P2 15 ஆண்டுகளாக டிரம்ப் வருமான வரி செலுத்தவில்லை!

15 ஆண்டுகளாக டிரம்ப் வருமான வரி செலுத்தவில்லை!

555
0
SHARE
Ad

வாஷிங்டன்: 2016- ஆம் ஆண்டு மற்றும் வெள்ளை மாளிகையில் கால் பதித்த தனது முதல் ஆண்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெறும் 750 டாலரை மத்திய வருமான வரிக்குச் செலுத்தியுள்ளார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக டிரம்ப், அவரது நிறுவனங்களுக்கான வரி பதிவுகளைப் பெற்றதாக நியூ யார்க் டைம்ஸ் கூறியது. முந்தைய 15 ஆண்டுகளில் அவர் வருமான வரி செலுத்தவில்லை என்றும் அது கூறுகிறது.

டிரம்ப் இந்த அறிக்கையை “போலி செய்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“உண்மையில் நான் வரி செலுத்தினேன், எனது வரி வருமானம் கிடைத்தவுடன் – அது தணிக்கைக்கு உட்பட்டது. அவை நீண்ட காலமாக தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது” என்று ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“உள்நாட்டு வருமான வரி சேவை என்னை நன்றாக நடத்துவதில்லை. அவர்கள் என்னை மிகவும் மோசமாக நடத்துகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

டிரம்ப் தனது செல்வம் மற்றும் வணிகம் தொடர்பான ஆவணங்களை பகிர்ந்து கொள்ள மறுத்ததற்காக சட்ட சவால்களை எதிர்கொண்டார். 1970- களில் இருந்து தனது வரி வருமானத்தை பகிரங்கப்படுத்தாத முதல் அதிபர் இவராவார்.