கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சபாவிலிருந்து திரும்பும் பயணிகள் கொவிட்19 பரிசோதனைக்காக நீண்ட நேரம் காத்திருப்பது சுகாதார அமைச்சின் ஊழியர்கள் பற்றாக்குறையால் அல்ல, ஆனால் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் திரும்புவதால் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு பயணிகளும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், ஆனால் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் இருப்பதால் அதற்கு நேரம் ஆகலாம் என்று சுகாதார இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
“ஒரு விமானத்தில் உள்ளவர்களைப் பரிசோதிக்க குறைந்தது இரண்டு மணிநேரம் ஆகலாம், ஒருவேளை அதிகமாக இருக்கலாம். மூன்று அல்லது நான்கு விமானங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்கள் வந்தால் அதற்கு நீண்ட நேரம் ஆகலாம்.
“பிரச்சனை என்னவென்றால், அதிகமான பயணிகள் உள்ளனர். எனவே நாம் காத்திருந்து பொறுமையாக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
னேற்று, கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்த ஆறு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய பயணிகள் இருந்ததாக புகார்கள் குறித்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.
செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 வரை சபாவிலிருந்து தீபகற்பத்திற்கு நுழைவோர் கொவிட்19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று டாக்டர் நூர் ஹிஷாம் சனிக்கிழமை அறிவித்தார்.