கோலாலம்பூர்: இஸ்தானா நெகாரா இன்று பிற்பகல் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஷயத்தை இன்று அரண்மனை சுருக்கமாக வெளியிட்டது.
“இஸ்தானா நெகாரா இன்று மாலை 6 மணிக்கு ஓர் அறிக்கையை வெளியிடும் என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்” என்று அரண்மனை அதிகாரி உறுதிப்படுத்திய இடுகை குறிப்பிடுகிறது.
இருப்பினும், அது எதனை குறிப்பாகக் குறிப்பிடுகிறது என்று குறிப்பிடவில்லை.
தொடர்பு கொண்ட அரண்மனை அதிகாரிகளும் இது குறித்து மேலும் கேட்டபோது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இந்த அறிக்கை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடினின் சுகாதாரம் குறித்தும் அல்லது நாட்டின் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் குறித்தும் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மாமன்னர் கடந்த திங்கட்கிழமை தேசிய இருதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
ஒரு நாள் கழித்து, எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றதாகக் கூறினார்.