Home One Line P2 கொவிட்19 பாதிப்பைப் தொடர்ந்து சொத்து விலைகள் குறையலாம்

கொவிட்19 பாதிப்பைப் தொடர்ந்து சொத்து விலைகள் குறையலாம்

695
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுநோயைத் தொடர்ந்து மலேசியாவில் சொத்து விலைகள், குறிப்பாக முதன்மை சந்தைகள் மந்தமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

வங்கிக் கடன் தள்ளுபடிக்கு பிந்தைய சூழலில், மேம்பாட்டாளர்கள் பணப்புழக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக அல்லது சந்தை பலவீனமான காரணத்தினால் சொத்து விலைகளைக் குறைக்க சாத்தியம் உண்டா என்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.

மெட்ரோ ஹோம்ஸ் ரியால்டி பெர்ஹாட்டின் நிர்வாக இயக்குனர் சீ கோக் லூங் கூறுகையில், வீட்டின் விலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அது வியத்தகு முறையில் வீழ்ச்சியடையாது என்று கூறினார்.

#TamilSchoolmychoice

“ஆம், விலைகள் குறையும். மேம்பாட்டாளர்கள் கட்டுப்பாட்டுக்கு பிந்தைய விலையை குறைக்க தயாராக இருப்பார்கள். ஆனால், இது முக்கியமாக மலிவு வீடுகள், புதிய வீடுகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படும்.

“இப்போதைக்கு அவர்களுக்குத் தேவையானது பணப்புழக்கம், ஏனெனில் இது இலாபத்தை விட முக்கியமானது” என்று அவர் கூறினார்.

மூன்று மாத நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலகட்டத்திலும், அதன் பின்னர் வந்த இரண்டு மாதங்களிலும், கட்டுமான நடவடிக்கைகள் எதுவும் அனுமதிக்கப்படாததால் மேம்பாட்டாளர்கள் எந்தவொரு இலாபத்தையும் சம்பாதிக்கவில்லை என்று சீ கூறினார்.

செயல்படாத கடன்களை (என்.பி.எல்) குறைக்க தேசிய வங்கி (பேங்க் நெகாரா) வங்கிகளுக்கு அறிவுறுத்தியது. இதன் காரணமாக வீட்டின் விலைகள் வெகுவாகக் குறையாது என்றும் அவர் கூறினார்.

“சில வங்கிகள் வட்டிக்கு மட்டுமே கடன்களை வழங்குகின்றன. மற்றவர்கள் தங்கள் கடன்களை மறுசீரமைக்கிறார்கள், அதாவது அடுத்த நான்கு ஆண்டுகளில் மாதாந்திர தவணையில் 25 விழுக்காடு மட்டுமே தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால், விலைகள் 30 விழுக்காடு வரை குறைந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆனால், தற்போதைய நடவடிக்கைகள் மூலம், விலைகள் பொதுவாக 10-15 விழுக்காடு வரை குறையும் என்று நான் மதிப்பிடுகிறேன்.” என்று அவர் கூறினார்.