Home One Line P1 ‘இப்போது தேவை புதிய அரசியல்வாதி இல்லை, புதிய வழிமுறை’- பிகேஆர்

‘இப்போது தேவை புதிய அரசியல்வாதி இல்லை, புதிய வழிமுறை’- பிகேஆர்

621
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவுக்கு இப்போது தேவைப்படுவது புதிய அரசியல்வாதிகள் இல்லை, அரசியல் பிரச்சனைகளை அணுகுவதற்கான ஒரு புதிய வழியாகும் என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாஹ்மி பாட்சில் கூறினார்.

நாட்டின் பொருளாதார, சமூக வாழ்க்கையைப் போலவே, இங்குள்ள அரசியலும் பெரும் இடையூறுக்கு ஆளாகி வருவதாக பிகேஆர் தகவல் தொடர்பு இயக்குநருமான அவர் கூறினார்.

“நமக்குத் தேவையானது புதிய அரசியல்வாதிகள் அல்ல, புதிய அரசியல் முறை தேவை.

#TamilSchoolmychoice

“இது ஏதோ புதினமாக இல்லாமல், விஷயங்களைச் செய்வதற்கான வித்தியாசமான வழியாக இருக்கலாம். உதாரணமாக, செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ மற்றும் பல புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை சுமந்து செல்லும் விதம் புத்துணர்ச்சியூட்டுகிறது.

“ஓர் அரசியல் கட்சி தொடர்புடையதாக இருக்க விரும்பினால், அவர்கள் செய்ய வேண்டியது இதுதான் – தற்போதைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண புதிய வழிகளைக் கண்டறியவும்” என்று அவர் மலாய் மெயிலுக்கு ஒரு சமீபத்திய பேட்டியில் கூறினார்.

ஆனால், அரசியல்வாதிகள் இதைப் புரிந்து கொள்ளத் தவறினால், அடுத்த தேர்தல்களில் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

செப்டம்பரில், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியை (முடா) பதிவுசெய்தார். இக்கட்சி இளைஞர்கள் வழிநடத்தும் ஒரு கட்சி என்று கூறி, அனைத்து வயதினருக்கும், மலேசியர்களுக்கு உறுப்பியம் சேர்க்கை திறக்கப்பட்டது.

எவ்வாறாயினும், புதிய கட்சியை உருவாக்குவதற்கான அவரது நடவடிக்கையை டாக்டர் மகாதீர் மற்றும் அம்னோ தலைவர்கள் விமர்சித்தனர். சைட் சாதிக்கின் கட்சி மலாய் வாக்காளர்களைப் பிளவுபடுத்தக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

இவ்வாறாக, தமது கட்சியை விமர்சித்த துன் டாக்டர் மகாதீருக்கு பதில் கூறும் வகையில் சைட் சாதிக் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். தமது கட்சி அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக அமையும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

தாம் துன் மகாதீரின் கருத்தினை மதிப்பதாகவும், தமது தற்போதைய பணியானது, அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைப்பதாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

“நான் இங்கு மலாய்க்காரர்களின் சேவகனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை. அனைத்து மலேசியர்களின் சேவகனாக இருக்க விரும்புகிறேன். நான் மலாய்க்காரர்களை ஒன்றிணைக்க மட்டும் இல்லை, அனைத்தும் மலேசியர்களையும் ஒன்றிணைக்க விரும்புகிறேன்”

“நான் துன் மகாதீரை மதிக்கிறேன். ஓர் இளைஞனாக, நம்பிக்கையுடன், மலேசியாவில் பன்முகத்தன்மை நம் பலம் என்று நான் மிகவும் நம்புகிறேன்.

“அவர் மலாய்க்காரர்களின் வாக்குகளை சிதைப்பதைப் பற்றி பேசுகிறார், ஆனால், நான் அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.