Home One Line P1 பத்திரிகையாளர்களுக்கு காலை உணவை அரண்மனை தரப்பு விநியோகித்தது

பத்திரிகையாளர்களுக்கு காலை உணவை அரண்மனை தரப்பு விநியோகித்தது

521
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அரண்மனைக்கு வெளியில் காத்திருக்கும் பத்திரிகையாளர்களுக்கு காலை உணவை அரண்மனை தரப்பு விநியோகித்தது. நுழைவாயிலுக்கு வெளியே கூடியிருந்த புகைப்படக்காரர்கள் இன்று காலை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் வருகைக்காக காத்திருந்தனர்.

மாமன்னர் செயலாளர் நாஜிம் முகமட் ஆலிம் இந்த உணவை விநியோகித்தார். ஊடக பிரதிநிதிகளின் பாதுகாப்பை பற்றி மன்னர் கவலைப்படுவதாகக் கூறினார்.

ஊடக ஊழியர்கள் காலை 8 மணி முதல் அரண்மனை வாயில்களுக்கு வெளியே கூடியிருந்தனர்.

#TamilSchoolmychoice

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறும் அன்வார், காலை 10.25 மணியளவில் இச்தான நெகாராவுக்கு வந்தார்.