கோலாலம்பூர்: ஊராட்சி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறையின் முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ அப்துல் அசிஸ் சம்சுடின் (82) நேற்று இரவு காலமானார்.
மலாய் கன்சல்டேடிவ் கவுன்சில் (எம்.பி.எம்) முகநூல் கணக்கின் ஒரு பதிவின் படி, அப்துல் அசிஸ் இரவு 11:52 மணிக்கு காலமானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அக்டோபர் 17, புக்கிட் டாமான்சாராவில் இறுதி சடங்குகள் நடைபெறும்.
“ஆயினும்கூட, நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கு ஏற்ப 20 பேரை மட்டுமே இறுதி சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்க இயலும்” என்று அது கூறியிருந்தது.
அவரது உடல் கோபெங்கில் அடக்கம் செய்யப்படும்.
பேராக் அம்னோ தொடர்புக் குழுவின் துணைத் தலைவராகவும், அம்னோ உச்சமன்ற உறுப்பினராகவும் இருந்த அவர் 2004 முதல் 2008 வரை ஊராட்சி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றினார்.
அவர் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட்டின் அரசியல் செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.