கோலாலம்பூர்: சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லீ மாலிக், பிரதமராக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவாக சத்தியப் பிரமானம் வழங்கி உள்ளதாக மலேசியாநவ் இணையத்தளம் செய்தி வெளிப்படுத்தி உள்ளது.
மஸ்லீயின் நடவடிக்கைகள் துன் டாக்டர் மகாதீர் முகமட்டுடனான உறவை மேலும் மோசமடையச் செய்யும் என்று அந்த அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.
“மஸ்லீயின் நடவடிக்கை டாக்டர் மகாதிருடனான அவரது உறவை மேலும் மோசமடையச் செய்யும்
வெள்ளிக்கிழமை, பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அனுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் மஸ்லீவும் ஒருவர்.
நம்பிக்கைக் கூட்டணி நிர்வாகத்தின் போது கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய மஸ்லீ, டாக்டர் மகாதீர் நிறுவிய பெஜுவாங் கட்சியில் இணைந்தார்.