Home One Line P2 தேர்தலில் தோல்வியுற்றால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன்

தேர்தலில் தோல்வியுற்றால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன்

592
0
SHARE
Ad

வாஷிங்டன்: அண்மையில், ஜார்ஜியாவில் நடைபெற்ற ஒரு பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஒருவேளை அவர் ஜோ பைடனுடன் தோற்று விட்டால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவதாகக் கூறியுள்ளார்.

“ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவை கம்யூனிஸ்ட் நாடாக மாற்ற விரும்புகிறார்கள். அமெரிக்காவின் வாழ்க்கை முறையை தீவிர இடதுசாரிகள் அழித்துவிடுவார்கள்,” என்று டொனால்டு டிரம்ப் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3- ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் களம் இறங்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பில் ஜோ பைடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.