Home One Line P1 நீர் விநியோகம்: 83 விழுக்காடு வழக்க நிலைக்குத் திரும்பியது

நீர் விநியோகம்: 83 விழுக்காடு வழக்க நிலைக்குத் திரும்பியது

403
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த திங்கட்கிழமை துர்நாற்றம், மாசுபாடு காரணமாக நான்கு சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடு நிறுத்தப்பட வேண்டியதையடுத்து, இன்று காலை 6 மணி வரை, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் 83 விழுக்காடு அல்லது 1,077 பகுதிகளில் நீர் விநியோகம் மீட்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 215 பகுதிகளில் இன்னும் உதவிகள் வழங்கப்படவுள்ளன. நாளை காலை 8 மணிக்குள் நீர் விநியோகம் முழுமையாக மீட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலு சிலாங்கூரில் நீர் விநியோகம் முழுமையாக மீண்டுள்ளது. கோலா சிலாங்கூர் 99 விழுக்காடு, பெட்டாலிங் (94 விழுக்காடு), கோலாலம்பூர் (89 விழுக்காடு ) மீட்டுள்ளன.

#TamilSchoolmychoice

கோலா லங்காட்டில் நீர் விநியோகம் இதுவரை 50 விழுக்காடு, கிள்ளான் ஷா ஆலாம் (54 விழுக்காடு) மற்றும் கோம்பாக் (71 விழுக்காடு) மட்டுமே மீண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு செயல்முறை சீராக இயங்குவதை உறுதிசெய்ய நீர் விநியோகத்தை மீண்டும் பெறும் பயனீட்டாளரை விவேகத்துடன் பயன்படுத்துமாறு ஆயர் சிலாங்கூர் அறிவுறுத்துகிறது.

கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட தடையால் 1,292 பகுதிகளை உள்ளடக்கிய மொத்தம் 1,196,457 ஆயர் சிலாங்கூர் கணக்குகள் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடையை சந்தித்தனர்.