Home One Line P1 ஆற்று நீர் மாசுபாடு: சிலாங்கூரில் மீண்டும் நீர் விநியோகத் தடை

ஆற்று நீர் மாசுபாடு: சிலாங்கூரில் மீண்டும் நீர் விநியோகத் தடை

632
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுங்கை சிலாங்கூரில் நாற்றம் மற்றும் மாசுபாடு காரணமாக நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று சிலாங்கூர் நீர் ஆணையம் (லுவாஸ்- LUAS) தெரிவித்துள்ளது.

ரந்தாவ் பஞ்சாங், எஸ்எஸ்பி 1, எஸ்எஸ்பி 2 மற்றும் எஸ்எஸ்பி 3 சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகாலை 12.30 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மூடப்பட்டதாக அது கூறியது.

“லுவாஸ் மற்றும் பிற தரப்புகள் விசாரித்து, தணிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன,” என்று அது கூறியது.

#TamilSchoolmychoice

கோலாலம்பூர், பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலாம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் கோலா லங்காட் ஆகிய இடங்களில் உள்ள 1,292 பகுதிகள் இந்த நீர் விநியோகத் தடையால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. 1.19 மில்லியன் பயனர்களுக்கு இதனால் பாதிப்புக்குள்ளாக உள்ளனர்.

சமீபத்திய இந்த பிரச்சனையால், ஏற்கனவே எஸ்எஸ்பி 1 நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குழாய் வெடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் நீர் விநியோகம் தாமப்படுமென்று கூறப்படுகிறது.

“ஆயர் சிலாங்கூர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் லாரிகளை அனுப்பியுள்ளது, மருத்துவமனைகள் மற்றும் சிறுநீரக சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது,” என்று அது கூறியது.

கடந்த மாத தொடக்கத்தில், சுங்கை சிலாங்கூரின் துணை நதியான சுங்கை கோங்கில் ஏற்பட்ட மாசுபாடு காரணமாக, திட்டமிடப்படாத நீர் தடையை ஏற்படுத்தியது.