Home One Line P1 மாமன்னர்- அன்வார் சந்திப்பு குறித்து காவல் துறை கவலைக் கொள்ள தேவையில்லை

மாமன்னர்- அன்வார் சந்திப்பு குறித்து காவல் துறை கவலைக் கொள்ள தேவையில்லை

557
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: திடீரென்று காவல் துறை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை விசாரிக்க ஆர்வம் காட்டுவதன் நோக்கத்தை பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை மாமன்னருக்கு சமர்ப்பித்ததற்காக, ஓரினச் சேர்க்கை, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் நடத்தப்படும் சூதாட்டங்களின் எண்ணிக்கை குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான காவல் துறை அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால், அவரை விசாரிக்க ஏன் இப்போது வரை காத்திருக்க வேண்டி உள்ளது என்று அவர் கேட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“பிரதமர் பதவிக்கு அன்வார் முயற்சியைத் தடுக்க ஒரு சிலர் முயற்சி செய்கின்றனர் என்பதா? அன்வார் அவரை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பித்தாரா இல்லையா என்பது காவல் துறையின் கவலையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ”

“அன்வார் பெயர்களை மாமன்னரிடம் சமர்ப்பித்திருந்தாலும், அது ஒரு குற்றமா?” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்களைத் தீர்ப்பதில், நாட்டில் காவல் துறையினர் அதிகம் செய்ய வேண்டியக் காரியங்கள் உள்ளன. எனவே அன்வார் சட்டத்தை மீறவில்லை என்றால் அவரைப் பற்றிய கவலை எதற்கு என்று அவர் வினவினார்.

அன்வார் மற்றும் பல அரசியல்வாதிகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கான காவல் துறை புகார்கள் வெளியிடப்பட்டுள்ளன.

“இந்த அறிக்கைகளை காவல் துறை முழுமையாக விசாரித்ததா என்பது எனக்குத் தெரியவில்லை.”

“பல அறிக்கைகளுக்கு அற்பமான மற்றும் அரசியல் இயல்பு தவிர வேறு எந்த அடிப்படையும் இல்லை என்பதும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்காக மாமன்னருடன் சந்திப்பை நாடிய பின்னர் அன்வார் மற்ற விஷயங்களுக்காக விசாரிக்கப்படுவது தற்செயலானதா?” என்று இராமசாமி தெரிவித்தார்.

அன்வாரின் திட்டங்களைத் தடுத்து நிறுத்த மலாய் பழமைவாத நிறுவனங்கள் முயற்சி செய்வதாக அவர் கூறினார்.

“காவல் துறை போன்ற அரசாங்கப் பிரிவுகள், நாட்டில் வேகமாக இருக்கும் அரசியல் செயல்பாட்டில் இருந்து தொழில் ரீதியாக விலகியிருக்க வேண்டும்.” என்று இராமசாமி தெரிவித்தார்.