புது டில்லி: ஸ்டேட் ஆப் குளோபல் ஏர் (State of Global Air) அனைத்துலக அளவிலான காற்று மாசுபாடு குறித்து ஆய்வில், 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் அதிகபட்ச காற்று மாசுபாட்டை (PM2.5)கொண்டுள்ளன.
அனைத்துலக அளவில் கடந்த ஆண்டு காற்று மாசுபாடு சார்ந்த பாதிப்புகளால் 476,000 குழந்தைகள் பலியாகியிருக்கின்றன. இந்தியாவில் மட்டும் 116,000 குழந்தைகள்உயிரிழந்துள்ளனர்.
காற்று மாசுபாடு காரணமாக இதய மற்றும் நுரையீரல் பாதிப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. இது தற்போது உலகம் சந்தித்திருக்கும் கொவிட்-19 தொற்றை விட இது மிக மோசமானதாகும் என்று ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.