Home One Line P1 நீர் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது

நீர் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது

565
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நீர் விநியோகத் தடை ஏற்பட்ட 1,292 பெட்டாலிங், கிள்ளான் / ஷா ஆலாம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர், கோலா லங்காட் மற்றும் கோலா சிலாங்கூர் பகுதிகளில் நீர் விநியோகம் இன்று காலை 6 மணி வரை முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது.

“திட்டமிடப்படாத நீர் விநியோகம் சீர்குலைவின் போது வாடிக்கையாளர்களின் பொறுமை மற்றும் ஒத்துழைப்புக்கு ஆயர் சிலாங்கூர் நன்றி தெரிவிக்க விரும்புகிறது. பயனீட்டாளர் தண்ணீரை விவேகத்துடன் பயன்படுத்துமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம், ” என்று அதன் தகவல் தொடர்புத் தலைவர் எலினா பசேரி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவலுக்கு, பயனீட்டாளர்கள் www.airselangor.com உள்ள ஆயர் சிலாங்கூர் வலைத்தளத்தைப் பார்வையிடலாம் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் துர்நாற்றம், மாசுபாட்டைத் தொடர்ந்து அவை மூட வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது நீர் விநியோகத் தடை ஏற்பட்டது.