கோலாலம்பூர்: தேசிய கூட்டணியுடன் நேற்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி அரசியல் போர்நிறுத்தத்தை அறிவித்த பின்னர், கட்சித் தலைவர்களிடையே நியாயமான போக்கு எப்போதும் நிலவுகிறது என்று அதன் பொதுச் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.
“சாஹிட்டின் இந்த நடவடிக்கையால் பலர் ஏமாற்றமடைந்தனர், ஏனெனில் அவருடைய கட்சி பிளவுபடுவதை மட்டுமே அவர்கள் பார்க்க விரும்பினர்.” என்று அவர் டுவிட்டரில் தெரிவித்தார்.
நேற்று, கொவிட் -19 ஐத் தொடர்ந்து “அரசியல் சண்டையை” நிறுத்துவதாக சாஹிட் ஹமிடி அறிவித்திருந்தார். மேலும், அவர் தேசிய கூட்டணி அரசாங்கத்தை ஆதரிப்பதாக வலியுறுத்தினார்.
“கொவிட் -19 அச்சுறுத்தலையும், நாட்டின் பொருளாதார நிச்சயமற்ற தன்மையையும் நாடு எதிர்கொள்ளும் நேரத்தில் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், தேசிய கூட்டணி அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பை பலப்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும், தற்போதைய கொவிட் -19- ஐ எதிர்த்து போராடவும், பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவுவதற்கும் இது செய்யப்பட்டதாகக் கூறினார்.
இப்போதைக்கு கொவிட்-19 தொடர்பான விவகாரத்தில் கவனம் செலுத்த இருப்பதாக அம்னோ முடிவு செய்துள்ளதாகவும் சாஹிட் கூறினார். இந்த யோசனையை முன்னர் அவரது கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ அசிராப் வாஜ்டி டுசுகி முன்வைத்திருந்தார்.