Home One Line P1 கடன் தள்ளுபடி கால அவகாசத்தை நீட்டிக்கும் வரை தேமு கேள்வி எழுப்பும்

கடன் தள்ளுபடி கால அவகாசத்தை நீட்டிக்கும் வரை தேமு கேள்வி எழுப்பும்

574
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடன் தள்ளுபடி கால அவகாசத்தை அரசு நீட்டிக்கும் வரை தேசிய முன்னணி தொடர்ந்து அது குறித்து கோரும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறினார்.

நிபந்தனைக்குப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்ந்தபோது, மொத்த கடன் தள்ளிபடியை நீட்டிக்கப்படாததற்கான காரணத்தை அவர் கேள்வி எழுப்பினார்.

“நிபந்தனைக்குப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பல முறை நீட்டிக்கப்படலாம், ஆனால், தானியங்கி கடன் தள்ளுபடியை மொத்தமாக நீட்டிக்க முடியாது. குறிப்பாக எம்40 கடன் பிரிவினருக்கு இன்னும் வசிதியாக இருக்கும். வங்கிகள் இன்னும் இலாபத்தை அனுபவிக்கின்றன,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அரசாங்கம் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும். தேசிய முன்னணி அது முடியும் வரை தொடர்ந்து போராடுவார் (கோரிக்கை)” என்று அவர் இன்று தனது பேஸ்புக்கில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

அண்மையில், வரவு செலவு திட்டம் தாக்கலின் போது, தேசிய கூட்டணி அரசாங்கம் கடன் தள்ளுபடி திட்டத்தை நீட்டிக்க அம்னோ மற்றும் நம்பிக்கைக் கூட்டணி முன்மொழிவை ஏற்கவில்லை.

செப்டம்பர் 30- ஆம் தேதி கால அவகாசம் முடிந்ததும் 85 விழுக்காடு கடன் பெற்றவர்கள் தொடர்ந்து பணம் செலுத்தியதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.

“இருப்பினும், கடனை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் இருந்தால், பி40 பிரிவைச்  சேர்ந்தவர்கள் இரண்டு விருப்பங்களைத்  தேர்வு செய்ய வங்கிகள் அனுமதிக்கின்றன,” என்று நிதியமைச்சர் ஜாப்ருல் அசிஸ் கூறியிருந்தார்.

பி40 குழு மூன்று மாத கால அவகாசத்தை தேர்வு செய்யலாம் அல்லது ஆறு மாதங்களுக்கு அவர்களின் மாத தவணை கட்டணத்தை பாதியாக குறைக்கலாம் என்று ஜாப்ருல் கூறினார்.