Home One Line P1 ஒரு வீட்டிலிருந்து இருவர் மட்டுமே ஒரு காரில் அனுமதி!

ஒரு வீட்டிலிருந்து இருவர் மட்டுமே ஒரு காரில் அனுமதி!

535
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இரண்டு பேர் மட்டுமே பொருட்களை வாங்க வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதாக விதிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறும் எந்தவொரு குடும்பத்திற்கும் 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படலாம்.

உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறையின்ன் இயக்குனர் அப்துல் ரஹீம் ஜாபர் கூறுகையில், தேசிய பாதுகாப்பு மன்றம் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இரண்டு பேரை மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிப்பதாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், அதிகாரிகளுக்கு பல்வேறு காரணங்களைக் கூறும் குடும்பங்கள் உள்ளன என்று அவர் கூறினார்.

“நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு மக்கள் தங்களது சொந்த விளக்கத்தை அளித்தால், கட்டுபாடு ஏற்படுத்தி உபயோகம் இல்லை,” என்று அப்துல் ரஹீம் மேற்கோளிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு மன்றத்தின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் அடிப்படையில், ஒரு வீட்டைச் சேர்ந்த இரண்டு நபர்கள் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.

கொவிட் -19 பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் பெர்லிஸ், கிளாந்தான், பகாங் மற்றும் சரவாக் தவிர அனைத்து மாநிலங்களிலும், கூட்டரசு பிரதேசங்களிலும் இப்போது நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை செயல்படுத்தப்படுகிறது.