Home One Line P1 கொவிட்19: புதிய சம்பவங்கள் 1,114 – இரண்டு மரணங்கள்!

கொவிட்19: புதிய சம்பவங்கள் 1,114 – இரண்டு மரணங்கள்!

1016
0
SHARE
Ad

noor-hisham-health-min-07072020கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,114 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இவற்றில் உள்ளூர் தொற்றுகள் 1,112 ஆகும். வெளிநாட்டிலிருந்து 2 தொற்றுகள் பீடிக்கப்பட்டிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 46,209 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

இன்று 803 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனிடையே, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 33,772 ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

இன்னமும், 12,131 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 103 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 43 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று இருவர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 306-ஆக உயர்ந்துள்ளது.

மிக அதிகமான தொற்றுகளை 391 சம்பவங்களோடு சபா பதிவு செய்துள்ளது. நெகிரி செம்பிலான் 371 சம்பவங்களைப் பதிவு செய்தது. சிலாங்கூர் மாநிலமும் 200 சம்பவங்களைப் பதிவு செய்தது.