Home One Line P1 எல்லா அம்னோ தொகுதிகளிலும் போட்டியிடும் துங்கு ரசாலியின் கூற்று நியாயமற்றது!

எல்லா அம்னோ தொகுதிகளிலும் போட்டியிடும் துங்கு ரசாலியின் கூற்று நியாயமற்றது!

545
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோவின் பாராம்பரிய தொகுதிகளில் மீண்டும் அம்னோ போட்டியிடும் என்ற துங்கு ரசாலியின் கூற்றை, பெர்சாத்து தலைவர் ஒருவர் சாடியுள்ளார். இது தேசிய கூட்டணி தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி என்று அவர் கூறியுள்ளார்.

முகமட் பாயிஸ் நாமான் கூறுகையில், துங்கு ரசாலி கருத்துகளில் எந்த ஆச்சரியமும் இல்லை, ஏனெனில் அவர் தேசிய கூட்டணிக்கு எதிராக பெரிதும் எதிர்மறையாக இருந்தவர். மேலும், முவாபாக்காட் நேஷனல் மூலம் பாஸ் உடன் அம்னோவின் ஒத்துழைப்பை ஒருபோதும் விரும்பவில்லை என்று கூறினார்.

“நாம் முடிவில்லாத பழிவாங்கும் அரசியலில் இருப்போம். சில ஆளுமைகளை கவனித்துக்கொள்வோம், இது நீண்ட காலத்திற்கு நமக்கு பாதகமாக இருக்கும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

#TamilSchoolmychoice

பாயிஸ் துங்கு ரசாலியை அம்னோ பொதுச் செயலாளர் அனுவார் மூசாவுடன் ஒப்பிட்டார். அவர், நம்பிக்கைக் கூட்டணியை எதிர்ப்பதற்கு கட்சிகளின் பெரும் கூட்டணியை விரும்புவதில் தொலைநோக்குடையவர் என்று அவர் கூறினார்.

“1980- களில் இருந்ததைப் போலவே மலேசியாவும், ஓர் எதேச்சதிகாரக் கட்சியால் வழிநடத்தப்படுகிறது என்று துங்கு ரசாலி இன்னும் கருதுகிறார். அதே நேரத்தில் அனுவார் முக்கிய கட்சிகளிடையே எதார்த்தமான அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் தேசிய அளவில் ஓர் இனத்தை ஒன்றிணைப்பதில் அக்கறை கொண்டுள்ளார்.

“துங்கு ரசாலி முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் நல்ல நண்பர் என்பது வெளிப்படையான இரகசியம். அன்வார் இப்ராகிம் பிரதமர் ஆவது குறித்து அவர்கள் இருவரும் கவலைப்படுகிறார்கள். ஆனால், விந்தையானது என்னவென்றால், தற்போதைய பிரதமர் மொகிதின் யாசின் தலைமையில் அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை, ” என்று அவர் கூறினார்.

தீவிர ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பழைய அரசியல் மனநிலையை மலாய்க்காரர்களும், முஸ்லிம்களும் ஒதுக்கி வைக்கும் நேரம் இது என்று பாயிஸ் கூறினார்.

இதனிடையே, நேற்று செவ்வாய்க்கிழமை, அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் மொகிதின் யாசினின் பாகோ நாடாளுமன்றத் தொகுதியில் அம்னோ கட்சி போட்டியிடும் என்று  துங்கு ரசாலி ஹம்சா தெரிவித்திருந்தார்.

அம்னோ, அது ஏற்கனவே வைத்திருந்த தொகுதிகளில் போட்டியிடும் என்று துங்கு ரசாலி கூறியிருந்தார்.

“என் கொள்கை எளிதானது, எங்களுடையதில் நாங்கள் போட்டியிடுவோம். பாகோவும் லங்காவியும் எங்கள் தொகுதிகளாக இருந்தன, ”என்று அவர் கூறியுள்ளார்.

லங்காவி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தற்போது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இருக்கிறார்.

அம்னோ மற்றும் பெர்சாத்து ஆகியவை தொடர்ந்து இணைந்து பணியாற்றினால், மலாய்க்காரர்கள் தொகுதிகள் தொடர்பாக மோதுவது தவிர்க்க முடியாதது என்று துங்கு ரசாலி கூறியிருந்தார்.