கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டத்தின் குழு அளவிலான விவாதம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியுறவு அமைச்சின் ஒருக்கீடுகளுடன் தொடர்ந்தது. அவ்வகையில் வெளியுறவு அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
துணை வெளியுறவு அமைச்சர் கமருடின் ஜாபர் தனது உரையை நிகழ்த்திய பின்னர் மக்களவை துணை சபாநாயகர் அசலினா ஓத்மான் சைட், இந்த ஒதுக்கீடுகளுக்கான வாக்கெடுப்பை நடத்தினார்.
பிரதமர் துறை அமைச்சு மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒதுக்கீடுகள் நேற்று திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டன.