கோலாலம்பூர்: வெளிநாட்டினரை திருமணம் செய்து, வெளிநாடுகளில் குழந்தை பெற்றெடுத்த மலேசிய பெண்களின் குழந்தைகளுக்கு தேசிய பாதுகாப்பு கரணமாக குடியுரிமை வழங்கப்படாது என்று உள்துறை அமைச்சின் துணை அமைச்சர் இஸ்மில் முகமட் சைட் இன்று நாடாளும்னறத்தில் கூறினார்.
இரு நாட்டு குடியுரிமைகளைக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை இது தடுப்பதற்காக என்று அவர் குறிப்பிட்டார்.
“பல நாடுகளில், வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகள் தந்தையின் குடியுரிமையை பின்பற்றுகிறார்கள். அதனால்தான், இந்த விவகாரத்தை நாம் துல்லியமாக கவனிக்க வேண்டும். இரட்டை குடியுரிமையை வழங்கிவிடக் கூடாது,” என்று அவர் கூறினார்.
ஒரு வேளை தந்தையின் குடியுரிமையைப் பின்பற்றி சம்பந்தப்பட்ட குழந்தை இன்னும் குடியுரிமைப் பெறாமல் இருந்தால், அரசியலமைப்பு விதி 15(2) படி அவர்கள் விண்ணப்பிக்கலாம். இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உட்படுத்தியது என்று அவர் கூறுனார்.
மத்திய அரசியலமைப்பு மலேசிய ஆண்களால் வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், மலேசிய பெண்களால் வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள் குறித்து தெளிவான முடிவைக் கொண்டிருக்கவில்லை.
குழந்தைகளின் குடியுரிமை தொடர்பாக பெண்களுக்கு ஆண்களுக்கு சம உரிமை இல்லததை இரு உறுதிபடுத்துவதாக பல ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.