Home One Line P1 முவாபாக்காட் நேஷனலை பதிவு செய்ய இயலவில்லை- வேறு அமைப்பு அப்பெயரைக் கொண்டுள்ளது

முவாபாக்காட் நேஷனலை பதிவு செய்ய இயலவில்லை- வேறு அமைப்பு அப்பெயரைக் கொண்டுள்ளது

433
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முவாபாக்காட் நேஷனல் பதிவு முயற்சி சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக பாஸ் உதவித் தலைவர் முகமட் அமர் அப்துல்லா கூறினார். இந்த பெயர் மற்ற கட்சிகளால் பயன்படுத்தப்பட்டது என்பதை அவர் தெளிவுப்படுத்தினார்.

“பதிவு செய்வதற்கான முயற்சிகள் உள்ளன என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், பதிவு செய்ய முடியாது, ஏனெனில் பெயர் ஏற்கனவே மற்றவர்களால் பயன்படுத்தப்படுகிறது. பெயர் (முவாபாக்காட் நேஷனல்) ஏற்கனவே சங்கப் பதிவாளரிடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனக்கு எப்படி என்று தெரியவில்லை. அதனால்தான் நாங்கள் பதிவு செய்ய முடியாது, நாங்கள் பதிவு செய்ய விரும்பினால் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்,” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதற்கிடையில், இதுவரை பெயர் மாற்றத்திற்கான முன்மொழிவு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“இதுவரை எந்த திட்டமும் இல்லை, எனவே நாங்கள் முவாபாக்காட் நேஷனல் பெயரைக் கொண்டு இயங்குகிறோம், ஆனால் பதிவு செய்யப்படவில்லை,” என்று அவர் கூறினார்.