Home One Line P1 முவாபாக்காட் நேஷனலை அம்னோ பதிவு செய்ய விரும்பவில்லை

முவாபாக்காட் நேஷனலை அம்னோ பதிவு செய்ய விரும்பவில்லை

446
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பதவி நீக்கம் செய்யப்பட்ட தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அனுவார் மூசா, கட்சி மற்றும் அம்னோவை உள்ளடக்கிய முவாபாக்காட் நேஷனல் கூட்டணியை பதிவு செய்யுமாறு பாஸ் முன்மொழிந்ததாகக் கூறினார். ஆனால், அம்னோ அதை நிராகரித்ததாக அவர் குறிப்பிட்டார்.

அண்மையில், பாஸ் துணைத் தலைவர் முகமட் அமர் அப்துல்லா கூறியதைக் காட்டிலும், அனுவாரின் பதில் வேறுபட்டிருந்தது.

கூட்டணியை சங்கப் பதிவாளரிடம் பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது, ஏனெனில் பெயர் மற்றொரு தரப்பினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

முகமட் அமர் கொடுத்த காரணத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று அனுவார் மூசா கூறினார். உண்மை என்னவென்றால், முவாபாக்காட் நேஷனல் பதிவு செய்ய வேண்டாம் என்று அம்னோ தலைமைக்கு அறிவுறுத்தியதே அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடிதான் என்று அனுவார் கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் இரு கட்சிகளும் கூட்டணி சாசனத்தில் கையெழுத்திட்டதிலிருந்து, இந்த முடிவு பல முறை மாறிவிட்டது என்று அனுவார் விளக்கினார்.

அப்போது அவர் அம்னோவின் பொதுச் செயலாளராக இருந்தார். நேற்று, அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.