Home One Line P1 பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாமன்னர் நெருக்கமாக கண்காணித்து வருகிறார்

பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாமன்னர் நெருக்கமாக கண்காணித்து வருகிறார்

509
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் நேரிச் சென்று பார்வையிட்ட புகைப்படங்கள் மக்கள் மத்தியில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது.

மலேசிய விமானப்படையின் ஹெலிகாப்டர்களின் மூலமாக மாநிலத்தின் வெள்ள நிலைமையை மாமன்னர் இன்று பார்வையிட்டபோது, ​​அவரது அக்கறையும், மக்கள் நலன் மீது கொண்டுள்ள அர்ப்பணிப்பும் பொது மக்களால் பரவலாகப் பேசப்பட்டது.

“அல்-சுல்தான் அப்துல்லா கோலா லிப்பிஸில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. கிளிபோர்ட் தேசிய பள்ளி மற்றும் சுங் ஹ்வா தேசிய வகை பள்ளியில் தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாமன்னர் சந்திப்பார்.

#TamilSchoolmychoice

“அதன் பிறகு, மாமன்னர் மெந்தாகாப் மற்றும் தெமெர்லோவுக்குச் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று கண்டு உதவுவார்,” என்று இன்று இஸ்தானா நெகாரா வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை கட்டம் 1 (எல்பிடி 1) இல் வெள்ளம் வழியாக நான்கு சக்கர வாகனத்தில் பகாங்கில் ஏற்பட்ட வெள்ள நிலைமையை பார்வையிட  அல்-சுல்தான் அப்துல்லா கடந்த செவ்வாயன்று அரண்மனையிலிருந்து புறப்பட்டார்.