Home One Line P1 உணவகங்கள் 10 மணி வரையிலும் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும்

உணவகங்கள் 10 மணி வரையிலும் செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும்

470
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மக்களின் பொருளாதார நலனுக்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது உணவகங்களின் இயக்க நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று அம்னோ உதவித் தலைவர் மாட்சிர் காலிட் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

கொவிட் -19 தொற்று சம்பவங்கள் அதிகரித்தாலும் கடுமையான கட்டுப்பாடு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் விதிக்கப்பட்டால் இந்த விவகாரம் செயல்படுத்தப்படலாம் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.

“இது மக்களின் பொருளாதாரத்துடன் தொடர்புடையது. உணவு மூலப்பொருள் விநியோகஸ்தர்கள், வர்த்தகர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் உணவகங்கள் பாதிக்கப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரை இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மக்கள் இரவு உணவிற்கு உணவு பெறுவதற்கான பிரதான நேரம். இரவு 10 மணி வரை உணவகங்களை திறக்க அனுமதிக்க கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நிறைய பேர் புகார் கூறுவதை நான் கேள்விப்படுகிறேன். தளர்வு கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்,”என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஜனவரி 18-ஆம் தேதி, மொத்தம் 21 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கீழ் வைக்கப்பட்டுள்ள மாநிலத்தில் உள்ள உணவகங்களின் செயல்படும் நேரத்தை நீட்டிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினர்.