Home One Line P1 பிப்ரவரி இறுதியில் பினாங்கு கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெறும்

பிப்ரவரி இறுதியில் பினாங்கு கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெறும்

448
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: பினாங்கு தனது முதல் கொவிட் -19 தடுப்பூசிகளை பிப்ரவரி மாத இறுதியில் பெற உள்ளது என்று பினாங்கு முதல்வர் சௌ கொன் இயோ தெரிவித்தார்.

இன்று காலை, தடுப்பூசிகள் வரவிருப்பது குறித்து மாநில சுகாதாரத் துறை பினாங்கு அரசுக்கு அறிவித்துள்ளது என்று அவர் கூறினார்.

“நாங்கள் இப்போது தடுப்பூசி நடைமுறைகளை குறிப்பாக தளவாடங்களின் அடிப்படையில் திட்டமிட்டுள்ளோம்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அவசர கட்டளைச் சட்டத்தின் கீழ் தனியார் வளங்கள் உள்ளிட்ட கூடுதல் வசதிகளின் தேவையை மாநில சுகாதாரத் துறை அடையாளம் காணும் என்று அவர் கூறினார். மேலதிக நடவடிக்கைகளுக்காக மாநில மற்றும் கூட்டரசு மட்டங்களுக்கு கொண்டு வருவதற்கு முன்னர் தொழில்நுட்பக் குழு மட்டத்தில் முதலில் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

“கொவிட் -19 தடுப்புப் பணிகளை மேம்படுத்துவதற்காக, அமலாக்கம், தகவல் தொடர்பு மற்றும் தகவல்களைப் பரப்புதல் போன்ற நடவடிக்கைகளுக்கு, இந்தத் துறையில் தன்னார்வலர்களைச் சேர்ப்பதற்கான மத்திய அரசின் அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், ” என்று அவர் கூறினார்.

கொவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராடுவதில் தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதன் வெற்றியை உறுதி செய்வதில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படும் என்று அவர் நம்புகிறார்.