Home One Line P1 இந்துக்களின் உணர்வை கெடா மந்திரி பெசார் மதிக்கவில்லை!

இந்துக்களின் உணர்வை கெடா மந்திரி பெசார் மதிக்கவில்லை!

586
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கெடா அரசாங்கத்தின் முடிவு இந்துக்களின் மத உணர்வுகளுக்கு அவமரியாதை என்று ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

“தற்போதைய கெடா மந்திரி பெசார் இந்து கோவில்களை இடிக்க தீவிரமாக இருந்தவர்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்து கோவில்கள் அழிக்கப்பட்டமை தொடர்பாக மாநில அரசு இரண்டு முறை கண்டிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

லிம் குவான் எங் தவிர, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், மஇகா துணைத் தலைவர் எம்.சரவணன் மற்றும் பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி ஆகியோரும் கெடா தைப்பூசத்தை இரத்து செய்ததை விமர்சித்தனர்.

இதனிடையே, இந்த விமர்சங்களுக்கு பதிலளித்த முகமட் சனுசி, பொது விடுமுறை இல்லை என்று பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசு எடுத்த முடிவு, மாநிலத்தில் இந்துக்களின் உரிமைகளை மறுக்கவில்லை என்று கூறினார்.

கொவிட்-19 தொற்று பரவுவதைத் தடுக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்குவதன் மூலம் மக்கள் எங்கும் திருவிழாவைக் கொண்டாட முடியும் என்று மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் கூறினார்.

“எல்லோரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் விடுமுறையில் இருக்கிறார்கள். இதுவரை, கெடா தைப்பூசத்திற்கு விடுப்பு வழங்கியதில்லை. இது கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுமுறையாக மாற்றப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான பொது விடுமுறை கெடாவில் இல்லை. கெடாவின் முடிவு, மாநிலத்தில் உள்ள யாருடைய உரிமைகளையும் ஒதுக்கி வைப்பதை நோக்கமாகக் கொண்டதல்ல. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே கெடாவில் தைப்பூசத்திற்கு நிகழ்வு விடுமுறை இல்லை என்றாலும், அது இன்னமும் கெடாவில் சுதந்திரமாகவும் கமகிழ்ச்சியாகவும் கொண்டாடப்படுகிறது, ” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கொவிட் -19 தொடர்பான தற்போதைய சூழ்நிலையைத் தொடர்ந்து, இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவிற்கு கெடாவில் விடுப்பு இல்லை என்று நேற்று முகமட் சனுசி தெரிவித்திருந்தார்.

இந்த பிரச்சனை அரசியல் மூலதனமாக பயன்படுத்தப்படக்கூடாது, ஏனெனில் நாடு இப்போது ஒரு பெரிய பிரச்சனையை எதிர்கொள்கிறது என்ரு சனுசி மேலும் கூறினார்.