Home One Line P1 சிலாங்கூரில் வெளிநாட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்!

சிலாங்கூரில் வெளிநாட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்!

489
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள கொவிட் -19 தடுப்பூசி திட்டத்தில், சிலாங்கூர் அரசு சுமார் ஒரு மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்களை உள்ளடக்கும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில், மாநிலம் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியின் 70 விழுக்காடு இலக்கை அடைய, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

சிலாங்கூரில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர்.

#TamilSchoolmychoice

“நிச்சயமாக நாங்கள் அனைத்து குடிமக்களையும் பாதுகாக்க விரும்புகிறோம். நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற, நம் சமூகத்தில் சுமார் 65 முதல் 70 விழுக்காடு வரை தடுப்பூசி செலுத்த வேண்டும்.

“ஆனால், அதன் விளைவு என்ன? தடுப்பூசி பெற்ற பிறகு, அந்த நபர் நோயெதிர்ப்பு பலனைக் கொண்டிருப்பார். ஆனால், அவர் இன்னும் இந்த தொற்றை பரப்ப காரணமாக இருக்க முடியும். எனவே, மற்றவர்களும் இந்த நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்க வேண்டும், “என்று அவர் கூறினார்.

இதில் உள்ளூர் மக்களுடன் வசிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களும் அடங்குவார்கள் என்று அமிருடின் கூறினார். சிலாங்கூர் தொழில்துறை மண்டலத்தில் பல தொழிற்சாலை பகுதிகளை அமிருடின் குறிப்பிட்டார்.

“வெளிப்படையாக அவர்களுக்கும் (வெளிநாட்டினருக்கும்) தடுப்பூசிகள் தேவை, ஏனென்றால் அவர்கள் சமூகத்துடன் வாழ்கிறார்கள். இல்லையெனில், உள்ளூர், சமூகம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருக்கும், ஆனால் அதே நேரத்தில் நோய்த்தடுப்பு இல்லாமல் வெளிநாட்டவர்கள் இருப்பார்கள்,” என்று அவர் கூறினார்.

“இதனால்தான் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, அவர்களின் முதலாளிகள் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கு தடுப்பூசிகளை வழங்க மாநில அரசும் தயாராக உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

மலேசியர்களைப் போல, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட முடியாது என்று அமிருடின் கூறினார். மாநில அரசு தடுப்பூசியை மானிய விலையில் அல்லது விலையில்லா விலையில் வழங்கலாம் என்று அமிருடின் கூறினார்.