Home One Line P1 பாலியல் துன்புறுத்தல் மசோதா மார்ச் மாதத்தில் தயாராகும்

பாலியல் துன்புறுத்தல் மசோதா மார்ச் மாதத்தில் தயாராகும்

463
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாலியல் துன்புறுத்தல் மசோதா மார்ச் மாதத்தில் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த மக்களவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்.

பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹருண், இந்த மசோதாவின் வரைவு சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு ஆய்வு செய்வதற்கான இறுதி கட்டத்தில் உள்ளது என்றார்.

“சிறிய திருத்தங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை மதிப்பீடு செய்ய வரைவு சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கூடியதும் மசோதாவை நாங்கள் முன்வைப்போம்.

#TamilSchoolmychoice

“அதே நேரத்தில், இந்த அமைச்சின் கீழ் உள்ள அனைத்து துறைகளும் விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்ளும்,” என்று அவர் நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறினார்.

பாலியல் துன்புறுத்தலுடன் தொடர்புடைய சிக்கல்களைத் தடுப்பதில் இந்த மசோதா முழுமையானதாக இருக்கும் என்றும், பணியிடத்தில் துன்புறுத்தலுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை என்றும் ரீனா தனது உறுதிமொழியைக் கொடுத்தார்.

சமீபத்தில் காவல்துறை சம்பந்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.