கோலாலம்பூர்: இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை பின்பற்றத் தவறியதால், 15 கட்டுமான தளங்களை நேற்றைய நிலவரப்படி மூடுமாறு கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம் (சிஐடிபி) உத்தரவிட்டது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஜனவரி 13 அன்று செயல்படுத்தப்பட்டதிலிருந்து, சி.ஐ.டி.பி 1,022 கட்டுமான தளங்களை ஆய்வு செய்துள்ளது. அவற்றில் 1,007 விதிக்கப்பட்ட நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்று பொதுப்பணி அமைச்சர் பாடில்லா யூசோப் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அனைத்து 15 கட்டுமான தளங்களும் தொழிலாளர்களின் தங்குமிடம், கூடல் இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது ஆகியவற்றின் அடிப்படையில் இணங்காததற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
“கட்டுமான தளங்களில் கொவிட் -19 சம்பவங்களில் பெரும்பாலானவை நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கவனிக்கத் தவறியதால் ஏற்பட்டதாகும்,” என்று அவர் கூறினார்.