Home One Line P1 கிளந்தான்: 41 எஸ்பிஎம் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி

கிளந்தான்: 41 எஸ்பிஎம் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி

568
0
SHARE
Ad

கோத்தா பாரு: பங்கால் சாங்கான் தொற்றுக் குழுவில் எஸ்பிஎம் மாணவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொற்றுக் குழுவில் இப்போது 64 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளந்தான் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் இசானி ஹுசின் கூறுகையில், பள்ளியின் ஊழியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட மொத்தம் 259 நபர்கள் ரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ளனர் என்று கூறினார்.

#TamilSchoolmychoice

“இன்றுவரை, பங்கால் சாங்காங் தொற்றுக் குழுவிலிருந்து மொத்தம் 64 பேர் (ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட) பாதிக்கப்பட்டுள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிளந்தான் மாநில சுகாதாரத் துறையும், கிளந்தான் கல்வித் துறையும் கலந்துரையாடியுள்ளன, ” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பங்கால் சாங்காங் தொற்றுக் குழுவில் மொத்தம் 41 எஸ்பிஎம் மாணவர்கள் இருப்பதை உறுதி செய்துள்ளதாக மலேசியாகினி நேற்று தெரிவித்தது.

இதற்கிடையில், தொற்றுக் கண்ட மாணவர்கள் தனித்தனியாக தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் என்று இசானி கூறினார்.

“பெரும்பாலான மாணவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. அவர்கள் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்கள் என்று கூறலாம். நலமுடன் உள்ள மாணவர்கள், பாதிக்கப்படக்கூடியவர்கள் (நெருங்கிய தொடர்பு) மற்றும் அறிகுறிகள் உள்ளவர்கள் என மூன்று பிரிவுகள் இருக்கும்,” என்று அவர் கூறினார்.