Home One Line P1 50 விழுக்காடு பார்வையாளர்களைக் கொண்டு திரையரங்குகளை திறக்க வேண்டும்

50 விழுக்காடு பார்வையாளர்களைக் கொண்டு திரையரங்குகளை திறக்க வேண்டும்

579
0
SHARE
Ad

கோலாலம்பூர்: லோட்டஸ் பைவ் ஸ்டார் திரையரங்க உரிமையாளர் 50 விழுக்காடு பார்வையாளர்களைக் கொண்டு திரையரங்குகளை மீண்டும் திறக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கீழ் உள்ள பகுதியில் பொழுதுபோக்கு துறையை மீண்டும் திறக்குமாறு அரசாங்கத்திடம் ஆர். துரைசிங்கம் பிள்ளை கேட்டுக்கொண்டார்.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்திய மாநிலங்களில் கூட்டங்கள், திருமணங்கள் மற்றும் பிற சமூகக் கூட்டங்களை அரசாங்கம் அனுமதித்த பின்னர், திரையரங்குத் துறையை அனுமதிக்க வேண்டும் அவர் என்று கூறினார்.

#TamilSchoolmychoice

“கூட்டங்கள், திருமணங்கள் மற்றும் சமூகக் கூட்டங்கள் அனுமதிக்கப்பட்டால், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை உள்ள மாநிலங்களில் திரையரங்குகளைத் திறக்க அனுமதிப்பதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் திரையரங்க உரிமையாளர்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவும் கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வக் நடைமுறைகளை ஏற்கவும் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

“அது தவிர, நானும் பிற திரையரங்கு உரிமையாளர்களும் பல படங்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தியுள்ளோம். ஆனால், திரையிட முடியவில்லை. எங்கள் துறை முற்றிலும் முடங்கிவிட்டது, ஆனால், நாங்கள் இன்னும் பணியாளர்களை மற்ற பணிகளுக்காக தக்க வைத்துக் கொண்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.