அவர் இன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 19) அதிகாலையில் காலமானார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
புதுக் கவிதைத் துறையில் இளம் வயது முதல் தீவிரமாக இயங்கிய ப.இராமு சில கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
தனது உடல்நலக் குறைவுக்கிடையிலும், இலக்கிய நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து கலந்து கொண்டு வந்திருப்பவர் ப.இராமு.
அன்னாரின் மறைவுக்கு செல்லியல் குழுமம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை அவரின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்
Comments