Home One Line P1 பிரதமருக்கு எதிராக அவதூறு- நீதிமன்றத்தில் தீர்க்க புவாட் முடிவு

பிரதமருக்கு எதிராக அவதூறு- நீதிமன்றத்தில் தீர்க்க புவாட் முடிவு

577
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் தமக்கு அனுப்பிய இழப்பீடு கடிதம் பெறப்பட்டதாகக் கூறிய அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகமட் புவாட் சர்காஷி, நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தை தீர்த்துக் கொள்ள விரும்புவதாக இன்று தெரிவித்தார்.

ஒரு முகநூல் பதிவில், புவாட், தாம் மொகிதின் யாசினுக்கு எதிராக அவதூறாகப் பேசவில்லை என்று கூறினார். மாறாக, இது பொது நலன் பிரச்சனை என்பதால் மூன்று நாட்கள் கண்காணிப்பு விதி குறித்து தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.

இது பேச்சு சுதந்திரத்திற்கான தனது உரிமை என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“நான் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை, எனது முகநூல் இடுகையை அகற்ற வேண்டிய அவசியமில்லை. எனவே நான் நீதிமன்றம் செல்ல தேர்வு செய்கிறேன். தனிமைப்படுத்தப்பட்ட பிரச்சனையில் பாரபட்சமான நடைமுறைக்கு எதிரானவர்களுடன் நிற்க இது எனக்கு வாய்ப்பளிக்கும், ” என்று அவர் கூறினார்.

கடந்த வாரம் முகநூல் இடுகையின் மூலம் அவதூறாகப் பேசியதற்காக பகிரங்க மன்னிப்பு மற்றும் 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி, பிரதமர், புவாட் சர்காஷிக்கு சட்ட நடவடிக்கை கடிதம் அனுப்பியிருந்தார்.

சம்பந்தப்பட்ட தரப்பு உடனடியாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கு ஒரு தெளிவான பொது மன்னிப்பு வழங்க ஒப்புக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து செய்தி இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் அவர் மன்னிப்புக் கோருவதற்கும், அதேபோன்ற அல்லது ஒத்த கருத்துகளை வெளியிடுவதை மீண்டும் செய்யக்கூடாது என்பதற்கான எழுத்துப்பூர்வ உறுதிமொழியை வழங்கக் கோரியும் இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

“எங்கள் வாடிக்கையாளருக்கு 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க கோருமாறு எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் தேதியிலிருந்து ஏழு நாட்களுக்குள் நீங்கள் மேற்கூறிய கோரிக்கைகளுக்கு இணங்கத் தவறினால், உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எங்கள் வாடிக்கையாளரின் அறிவுறுத்தல்கள் எங்களிடம் உள்ளன,” என்று பிரதமரை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் நிறுவனம் கூறியது.