Home One Line P1 ‘பெர்சவரன்ஸ்’ விண்கலன் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

‘பெர்சவரன்ஸ்’ விண்கலன் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

620
0
SHARE
Ad

கலிபோர்னியா: கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி, நாசா, ‘பெர்சவரன்ஸ்’ விண்கலனை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. பழங்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக இந்த ரோவர் விண்கலத்தை நாசா அனுப்பி வைத்தது.

செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை இந்த விண்கலம் ஆய்வு செய்யும்.

இந்நிலையில், பெர்சவரன்ஸ் விண்கலம் இன்று வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி விட்டது என்று தெரிய வந்தது. மேலும், செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் எடுத்த புகைப்படத்தையும் நாசா தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.