Home One Line P1 ‘நம்பிக்கை கூட்டணி அரசியல்வாதிகள் ஈடுபட்டால், காவல் துறை விரைவாக விசாரிக்கிறது’

‘நம்பிக்கை கூட்டணி அரசியல்வாதிகள் ஈடுபட்டால், காவல் துறை விரைவாக விசாரிக்கிறது’

601
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாகினிக்கு எதிரான கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த தனது அறிக்கையின் விசாரணையை காவல் துறை விரைவாகக் கையாண்டதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு கூறினார்.

இது அரசாங்க அரசியல்வாதிகளை உள்ளடக்கியிருந்தால், காவல் துறையின் விசாரணை இவ்வளவு வேகமாக இருக்காது என்று அவர் கூறினார்.

“இது மிரட்டல். உண்மை என்னவென்றால், நீங்கள் (காவல் துறை) நம்பிக்கை கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விரைவான விசாரணையை மேற்கொள்கிறீர்கள், ஆனால் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்ககளிடம் இதைச் செய்யவில்லை.

#TamilSchoolmychoice

“அமைச்சர்கள் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (கொவிட் -19) மீறியுள்ளனர். பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன, ஆனால் பல மாதங்களாக விசாரணை முடிக்கப்படவில்லை. என் விஷயத்தில், நீங்கள் எட்டு நாட்களுக்குப் பிறகு எனது அறிக்கையை பதிவு செய்ய வந்தீர்கள். இது நியாயமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் விசாரிக்க விரும்பினால், அனைவரையும் விசாரிக்க வேண்டும் (அதே வழியில்),” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, சார்லஸ் சந்தியாகு கோலாலம்பூரில் புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கெடாவைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி விசாரித்துள்ளார்.