Home One Line P1 கட்சித் தாவ இருவர் தம்மை அணுகியதாக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் அறிக்கை

கட்சித் தாவ இருவர் தம்மை அணுகியதாக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் அறிக்கை

540
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கட்சித் தாவவும், தனது ஆதரவை தேசிய கூட்டணிக்கும் வழங்கவும் இருவர் கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் நத்ரா இஸ்மாயில், “டத்தோஸ்ரீ” தலைப்புக் கொண்ட ஒருவரும் தன்னை அணுகியதாகக் கூறினார். செகிஜாங்கில் தாம் சிறப்பாக பணியாற்றுவதாகவும், அதற்கு மேலும் உதவிகள் வழங்க பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவு வழங்குவாரா என்று அவர் கேட்டதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.