கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் தனது கட்சி புரிந்து கொள்ள வேண்டிய மூன்று முக்கிய விஷயங்களை அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் பட்டியலிட்டுள்ளார்.
அம்னோ அதன் உண்மையான எதிரிகள் யார் என்று குழப்பமடையக்கூடாது என்றும், அது கட்சிக்கு மிகவும் அழிவுகரமானவை என்றும் அவர் கூறினார்.
கட்சியை ஆதரிப்பதாக பாசாங்கு செய்யும் கட்சியின் உறுப்பினர்களை அம்னோ கண்டறிய வேண்டும், அவர்கள் எளிதில் வாங்கப்படுகிறவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
“அம்னோவில் அதிகாரத்தில் இருக்க அவர்களுக்கு இன்னும் தேவை உள்ளது. ஆனால் அவர்களின் எண்ணங்கள் வேறொரு இடத்தில் உள்ளன. பொருள்சார்ந்த விருப்பங்களால் அவர்கள் களங்கப்பட்டிருக்கிறார்கள். அம்னோ வலுவாக இருக்கும்போது, அவர்கள் அருகில் இருக்கிறார்கள். நாம் பலவீனமாக இருக்கும்போது, அவர்கள் தொடருவதில்லை,” என்று அவர் கூறினார்.
மூன்றாவதாக, மலாய்க்காரர்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரியாக இருக்கும் எவரும் அம்னோவின் எதிரி என்ற தனது நிலைப்பாட்டை அம்னோ மீண்டும் வலியுறுத்த வேண்டும் என்றார்.
நம்பிக்கை கூட்டணி மற்றும் தேசிய கூட்டணி அரசாங்கங்களின் செயல்திறன் தேசிய முன்னணியின் 60 ஆண்டுகளாக திறனை மிஞ்ச முடியவில்லை என்று முகமட் கூறினார்.