Home One Line P1 சாஹிட் ஹமிடியை விலகக் கூறுவது கட்சி முடிவாக இருக்க வேண்டும்!

சாஹிட் ஹமிடியை விலகக் கூறுவது கட்சி முடிவாக இருக்க வேண்டும்!

569
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அகமட் சாஹிட் ஹமிடிக்கு விரோதமாகக் காணப்பட்டாலும், முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா, அம்னோ தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு சில தரப்பினரின் அழைப்பு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

சாஹிட் ஹமிடி பதவி விலக வேண்டுமா இல்லையா என்பது கட்சி முடிவு செய்யக்கூடியது என்று அனுவார் தெளிவுபடுத்தினார்.

அவர் பதவி விலக விரும்பினால், அது கட்சி விதிகள் மூலம் செய்யப்பட வேண்டும் என்று கெதெரே நாடாளுமன்ற உறுப்பினருமான அனுவார் கூறினார்.

#TamilSchoolmychoice

“இது நல்லது என்று நான் நினைக்கவில்லை. நான் ஒப்புக்கொள்ளவில்லை. கட்சி விதிகளில் உள்ளதை நாம் பின்பற்றுகிறோம் என்று நினைக்கிறேன். பதவி விலக விரும்பினால், அது கட்சியின் முடிவாக இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, கட்சி விதிகளில் உள்ளதை நாம் பின்பற்றுகிறோம்,” என்று அவர் கூறினார்.

கட்சித் தேர்தலுக்கான நேரம் வரும்போது, ​​யார் வேண்டுமானாலும் போட்டியிட முன்வரலாம் என்று கூட்டரசு பிரதேச அமைச்சருமான அனுவார் கூறினார்.

அதே நேரத்தில், கட்சி நிலையற்றதாக மாற்றக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் அம்னோ உறுப்பினர்கள் ஏற்படுத்தக்கூடாது என்று அனுவார் கூறினார்.